இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Tuesday, July 20, 2010

என் அரசியல்...

மலக்கூடை சுமந்த காந்தியைப் பிடிக்கும்
விபூதி இட்டுக் கொண்ட பெரியாரைப் பிடிக்கும்.
பிராமணப் பெண்ணை மணந்து கொண்ட அம்பேத்கரைப் பிடிக்கும்
பறையருக்கு பூணூல் மாட்டிவிட்ட பாரதியைப் பிடிக்கும்.

தெரேசாவின் சமூக சேவை பிடிக்கும். உள்நோக்கம் பிடிக்காது
கார்ல் மார்க்ஸின் சிவப்பு பிடிக்கும். ரத்தம் பிடிக்காது.
பிரபாகரனின் வீரம் பிடிக்கும். சர்வாதிகாரம் பிடிக்காது.

ராமனுடன் மது அருந்துவேன்
இயேசுவை சர்ச் சிலுவையில் இருந்து விடுவிப்பேன்.
முகம்மது நபியை மதம் மாற்றுவேன்.

மோடி, தினமும் மசூதியில் ஐந்து நேரமும் தொழுகை அழைப்புப் பாடல் பாட வேண்டும்.
சோனியா, அதி நவீன நார்க்கோ அனலசிஸுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
ப.சிதம்பரத்தின் வேட்டியை கழட்டிப் போட்டுவிட்டு கோமணம் கட்டி வயலில் இறங்க வேண்டும்.
அஜ்மல் கஸாப் இந்து கோயில்களில் உழவாரப் பணிகள் செய்ய வேண்டும்.

என் அரசியல் ஆசான் கலைஞர் கருணாநிதி
(எப்படி அரசியல் நடத்தக்கூடாது என்பதைக் கற்றுக் கொடுத்துவருபவர்)
என் ஆன்மீக ஆசான் நாராயண குரு
(ஈழவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாதா... சரி, அப்படியானால் கோயிலை ஈழவரிடம் எடுத்துச் செல்கிறேன்)
இலக்கிய உலகில் வள்ளுவரையும் கம்பரையும் எனக்குப் பிடிக்காது
(நான் எட்ட விரும்பிய சிகரத்தை என்றோ எட்டிவிட்டார்கள்)

சங்கராச்சாரியன் செருப்பு தைப்பவரின் கால் கழுவி பாதபூஜை செய்யவேண்டும்.
போப்பாண்டவன் ஓநாய் பிஸினஸை நிறுத்தவேண்டும்.
பின் லேடனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்
(அவர் அதற்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா..?)

என் பார்வையில் இன்றைய
பிழையான பிராமணியத்தின் பிரதிநிதிகள் : (அமெரிக்க-ஐரோப்பிய) கிறிஸ்தவ தேசங்கள்
மோசமான சத்ரிய அம்சத்தின் பிரதிநிதிகள் : (ஆஃப்கனிய, அரபு) இஸ்லாம் தேசங்கள்
அற உணர்வற்ற வைசியத்தின் பிரதிநிதிகள் : (சீன, ஜப்பான், கொரிய) பவுத்த தேசங்கள்
விழிப்பு உணர்வு அற்ற சூத்திர அம்சம் : (இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம்) இந்து தேசங்கள்
பாவப்பட்ட பஞ்சம தேசம் : பழங்குடியின ஆஃப்ரிக்க நாடுகள்

இந்து மதம் முன் வைக்கும் வர்ணப் பாகுபாட்டை வரவேற்கிறேன்; சாதி அமைப்பை எதிர்க்கிறேன்.
இஸ்லாமின் சமத்துவத்தை வரவேற்கிறேன்; கொடூரமான கட்டுப்பாட்டை வெறுக்கிறேன்.
கிறிஸ்தவத்தின் சகோதரத்துவத்தை வரவேற்கிறேன்; பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டு அஞ்சுகிறேன்.
பவுத்தத்தின் அதிகார எதிர்ப்பை வரவேற்கிறேன்; அதீத ஒழுக்கத்தை மறுக்கிறேன்.
பழங்குடி சமயத்தின் மையம் அழிந்த தன்மையை வரவேற்கிறேன்; நிராதரவைக் கண்டு வருந்துகிறேன்.
நாத்திகத்தின் பகுத்தறிவை வரவேற்கிறேன்; ஆனால், அதை எல்லாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன்.

No comments:

Post a Comment