இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Friday, August 13, 2010

போராட்டக்காரர்களை உள்ளே நுழையக் கூட விடாமல்
கேட்டை இழுத்து மூடினான் தாயோளி செக்யூரிட்டி

உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்களை
அடியாட்களைக் கூட்டி வந்து அடித்து விரட்டினான் வக்காலி சூப்பர்வைஸர்

முகவரிகளைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்
வேலை இருந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்றான் மேனேஜர் மயிராண்டி

பணியாட்கள் அதிகம் இருப்பதாக
மேலிடத்துக்குப் போட்டுக் கொடுத்தான்
ஹெச்.ஆர். தேவ்டியாமகன்

முதலாளி ஐயா பாவம்
நவீன இயந்திரங்களுக்கான
வெளிநாட்டு ஒப்பந்தத்தில்
ஒற்றைக் கையெழுத்து மட்டுமே போட்டார்.

3 comments:

  1. நல்ல கெட்ட வார்த்தையிலே வையணும் போல இருக்கு....

    ReplyDelete
  2. அப்ப என்னதான் செய்யணும் மொதலாளி. பழைய மிஷினை வெச்சே காலத்தை ஓட்டணுமா.? பத்து பேர் வேலையை புது மிஷின் பண்ணினா பத்து பேருக்கு சும்மா சம்பளம் போட்டுக் கொடுத்துட்டே இருக்கணுமா..?

    ReplyDelete
  3. போட்டிகள் நிறைந்த உலகில் யந்திரமயமாக்கல் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். யந்திரங்கள் வந்தால் பலருக்கு வேலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், ஒரு முதலாளி என்பவர் புதிய யந்திரம் வாங்கும்போது வெறும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுவது தவறு. அதிலும் அவர் அந்த அளவுக்கு வளர கடந்த காலத்தில் உதவியவர்களைக் கழட்டிவிட்டு அந்த வளர்ச்சியை அடைய நினைக்கக்கூடாது. அவர்களுக்கு வேறொரு வேலை வாய்ப்பை கட்டாயம் அவர் உருவாக்கித் தந்த பிறகே (அதிலும் அவருக்கு லாபம் வரத்தான் போகிறது) புதிய யந்திரங்களை வாங்க வேண்டும். காட்டுக்குள் ஒரு அணை கட்டுவதானால், அக்கம் பக்கத்தில் வாழும் பழங்குடிகளுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை உருவாக்கித் தரவேண்டும் என்று சொல்வதைப் போன்றதுதான் இது. மொதலாளியா இருக்கறது தப்பில்லை. நல்ல மொதலாளியா இருக்கணும்.

    ReplyDelete