இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, September 11, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 15

அனந்தன் : இந்தப் போரில் பல கிறிஸ்தவ பாதிரிகளும் பத்திரிகையளர்களும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்களே… பிரபாகரன் முதன் முதலில் கொன்றது கூட ஆல்ஃபிரெட் துரையப்பா என்ற கிறிஸ்தவரைத்தானே…

காவி : ஏன் கொன்றார்கள்?

அனந்தன் : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பழிவாங்க அவரைக் கொன்றார்கள்.

காவி : மிக மிகத் தவறு. இலங்கையில் நடந்த ஒரு மாநாட்டுக்கு இலங்கை அதிபரை அழைக்காதது, மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தியது, அனுமதி பெற்ற தேதியையும் தாண்டி மாநாட்டை நடத்தியது, அனுமதி மறுக்கப்பட்டவர்களை பேச அரங்குக்கு அழைத்து வந்தது, மின் கம்பம் சரிந்தது என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா நூற்றில் ஒரு சதவிகிதம்கூடக் காரணம் இல்லை. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் என்ன தெரியுமா..? ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுதான். ஆஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா..? வரதராஜ பெருமாள் கோவிலின் வாசலில் வைத்து கொன்றார் பிரபாகரன். பின்னால் பொங்கிப் பிரவகிக்கத் தொடங்கிய ரத்த அருவியின் முதல் துளி அது.

பிரபாகரன் தன் மகனுக்கு சூட்டிய அழகுப் பெயர் என்ன தெரியுமா..? சார்லஸ்..!

அனந்தன் : அது விடுதலைப் போரில் உயிர் துறந்த ஒரு மாவீரனின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அல்லவா..?

காவி உடை அணிந்தவர் : அப்படித்தான் சொல்வார்கள். வீர மரணம் எத்தனையோ பேர் அடையத்தான் செய்தனர். ஆனால், பிரபாகரனுக்கு சார்லஸ் மட்டுமே நினைவுக்கு வந்திருக்கிறார். கிறிஸ்தவ நாடுகளின் செல்லப் பிள்ளையாக வேண்டுமல்லவா..? உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களையும் அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம்! வேலை முடிந்துவிட்டது. கழட்டி விட்டுவிட்டார்கள்.

அனந்தன் : பிரபாகரன் சிங்களப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு அல்லவா உயிரிழந்தார். இதில் கிறிஸ்தவ சதி எங்கிருந்து வருகிறது?

காவி : கிறிஸ்தவ சதியின் வல்லமையே அதுதான். எந்தவொரு செயலுக்கும் மேலே வெண்ணிறத்தில் சாம்பல் படிந்ததுபோல் சாதுவாக ஒரு காரணம் இருக்கும். உள்ளுக்குள் ஒரு கிறிஸ்தவ காரணம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். அருகில் சென்று தொட்டுப் பார்ப்பவர்களுக்கே அந்த அழிவின் வெப்பம் தெரியும். பிரபாகரன் மரணத்திலும் அப்படித்தான். உங்களை ஒன்று கேட்கிறேன்… பிரபாகரனுடைய மரணத்தை இந்த உலகில் பெரும் ஆர்வத்துடன் யார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் தெரியுமா..?

அனந்தன் : சிங்கள அரசியல்வாதிகள்தான்.

காவி : அதுதான் இல்லை. அவர்கள் அவரது இருப்பை உள்ளூர விரும்பினார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களுடைய அராஜகங்களைத் தொடர முடியும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

அனந்தன் : விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர் அல்லது தமிழர் யாராவது..?

காவி : அதுவும் இல்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்.

அனந்தன் (சிறிது யோசித்தபடியே) : புலிகளால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது… (சட்டென்று நினைவு வந்தவராக) சோனியா காந்தி.

காவி : மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

குட்டி : ஆனால், அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை கூடக் கொடுக்க வேண்டாம் என்று கருணையோடு மன்னிப்பு அல்லவா வழங்கினார்.

காவி (அலட்சியமாக) : கருணையா… ராஜீவ் கொலைக்கு எவரொருவருக்காவது சட்டபூர்வமாக தண்டனை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றால், யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்க அவர் சம்மதம் தந்தார் என்றால் அந்த தூக்குக்கயிறு நேராக அவரது கழுத்தை நோக்கி நீளும் என்ற பயம்.

அனந்தன் : பயமா..? அவர் எதற்கு பயப்பட வேண்டும்.

காவி : பிறகு, கொலை செய்யச் சொன்னவர் பயப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்..?

அனந்தன் (அதிர்ந்தபடி) : ராஜீவைக் கொல்லச் சொன்னது சோனியாவா..?

காவி : ஆமாம் அவரேதான். லண்டனில் ராஜீவ் படித்த கல்லூரியில் வைத்து ஆண்டனியோ மெய்னோ சந்தித்தபோதே ராஜீவின் மரணக் கடிகாரத்தின் மணல் துளிகள் உதிர ஆரம்பித்துவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புல்வெளியில் ராஜீவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட சோனியாவின் காதல் கரங்கள் அன்றே இறுக்கத் தொடங்கிவிட்டன. சஞ்சய் காந்தியின் விமான விபத்து… இந்திரா காந்தியின் படுகொலை… என சோனியாவுக்கான தடைகள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன. ராஜீவின் மரணம் கடைசி தகர்ப்பு. அது பிரபாகரனின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

அனந்தன் : புலிகள் ஏன் அதைச் செய்ய முன் வந்தார்கள்? அதனால் அவர்களுடைய இயக்கத்துக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு அல்லவா ஏற்படும். அது தெரியாதவர்களா அவர்கள்.

காவி : அவர்கள் அதைச் செய்ய முன் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. மேலோட்டமாகத் தெரிவது புலிகளுக்குப் பிடிக்காத வகையில் ராஜீவ் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். ஆனால், அதற்காக கொல்லும் அளவுக்குப் போக அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லைதான். உண்மையில், ராஜீவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த விஷயங்களே வேறு. ஆயுதப் போரை ஆரம்பித்துவிட்டோம். இலங்கை அரசும் ரொம்பவும் கொடூரமாகவே நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டாட்சிக்கு ஒப்புக் கொண்டால் எங்களுக்கு மிகவும் அவமானமாகப் போய்விடும். என்னையே யாராவது கொன்றாலும் கொன்றுவிடுவார்கள். எனவே, நீங்கள் எங்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைப்பதுபோல் மிரட்டுங்கள். வேறு வழியில்லாததுபோல் நாங்களும் நடந்து கொள்கிறோம். அடிப்பதுபோல் அடியுங்கள் அழுவதுபோல் அழுகிறோம் என்று திட்டம் போட்டுத்தான் ராஜீவ்-பிரபாகரன் விவகாரங்கள் நடந்தன. எனவே, பிரபாகரன் ராஜீவைக் கொல்ல ஒருபோதும் தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால், அதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள்.

சோனியா காந்தி, பிரபாகரனுடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார். ராஜீவ் இருக்கும்வரை மாநில ஆட்சிக்கு மேலாக வேறு எதுவும் கிடைக்காது. அவரைக் கொன்றால் அதற்கடுத்து இந்திய ஆட்சி என் கைக்கு வரும். நான் இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ஈழம் மலர நிச்சயம் உதவுவேன் என்று உத்தரவாதம் தந்தார். பிரபாகரன் அதை நம்பினார். ஆக ராஜீவைக் கொல்வது என்பது வெகு காலத்துக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்களை உருவாக்கும் பணி தான் அதன் பிறகு நடந்தது. அப்போதும் சர்வதேச அளவில் தங்கள் இயக்கத்தின் பெயருக்கு ஏற்படும் களங்கம் ஏற்படுமே என்று அவர் கலங்கியபோது, சோனியா, ரிச்சர்ட் ஜெயவர்த்தனா மூலம் சிங்களக் கைக்கூலியை வைத்து ஒரு பொய்யான தாக்குதல் முயற்சியை அரங்கேற்றினார். நாளை புலிகள் மேல் பழி வராமல் பார்த்துக் கொள்ள வேறு உத்தரவாதங்களும் தரப்பட்டன. என்னதான் ஆனாலும் வழக்கை இந்திய அதிகாரிகள்தானே எடுத்து நடத்துவார்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்று சோனியா உறுதி அளித்தார். இது போதாதென்று பெருமரங்கள் விழும்போது பூமியில் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்று இந்திரா காந்தி இறந்தபோது நடந்த சீக்கியக் கொலைகளை நியாயப்படுத்தியிருந்தார் ராஜீவ். எனவே, சீக்கியர்களுக்கும் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. பழியை இவர்கள் யார் மேலாவது போட்டுத் தப்பிவிடலாம் என்று பிரபாகரனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் புலிகள் அத்தனை பெரிய செயலைச் செய்ய முன் வந்தனர். ஆனால், மற்றவர்களைவிட தங்களை நம்பும் குணம் அவர்களுக்கு உண்டு. யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல் செய்து முடிக்கத்தான் அவர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அனந்தன் : ஆனால், கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது அல்லவா..?

காவி : அது வேறொரு சதியின் அங்கம். அந்தப் பெரும் விபத்தில் புகைப்படக்காரர் இறந்துவிட்டார். ஆனால், அவர் பயன்படுத்திய கேமரா மட்டும் சேதமடையாமல் எப்படி தப்பியது..? சோனியாவின் டபுள் கேம் அது. புலிகளை ஒரு கட்டுக்குள் வைக்க செய்யப்பட்ட சதி அது. அவர்கள்தான் செய்தது என்பது தெரியாமல் போனால், செய்யச் சொன்னவர்களுக்கு இன்னும் அபாயம் அல்லவா. அதனால் அந்த கேமரா அங்கு போடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் கொலைதிட்டத்துக்கு உதவியாக இருந்த வேறு பலரைக் காட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு வீடியோ கேஸட்டை கமுக்கமாக மறைத்தும் விட்டார்கள்.

அது தேர்தல் காலம். ராஜீவுக்குப் பிரதமராக வாய்ப்புகள் மங்கலாக இருந்த நேரம்.

அனந்தன் : ஆனால், ராஜீவ் ஆட்சிக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால்தானே புலிகள் அந்தக் கொலையைச் செய்ததார்கள்.

காவி : இல்லை. அது உண்மை இல்லை. ராஜீவ் மத்திய ஆட்சியை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்த நேரம். போபார்ஸ் கேஸ் மூலம் 1989 தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அவருடைய நிலைமை எந்த வகையிலும் சீரடைந்திருக்கவில்லை. போபார்ஸ் கேஸை துரிதப்படுத்தினார்கள் என்பதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கலைத்திருந்தார். கைப்பொம்மையாக நியமித்த சந்திர சேகர் ஆட்சியையும் அல்ப காரணம் சொல்லி கவிழ்த்திருந்தார். எனவே, அப்போதைய தேர்தலில் ராஜீவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. அனுதாப அலை மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; நாமே ஒரு சிறிய விபத்தை ஏற்பாடு செய்து, அதில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து தேர்தலைச் சந்திப்போம். எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருக்கு தலையணை மந்திரம் ஓதப்பட்டது. அப்பாவி ராஜீவ் அதை நம்பினார்.

சதித்திட்டம் அவருக்கு விளக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உரையாற்றப் போகும்போது நேராக மேடைக்குச் செல்ல வேண்டாம். மேடைப் படிகளுக்கு அருகில் குண்டு வெடிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் அந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தில் இருங்கள். சுற்றிலும் நமது பாதுகாப்பு வீரர்கள்தான் இருப்பார்கள். மேலும் குண்டு வெடித்துச் சிதறும்போது அதில் பொதியப்பட்டிருக்கும் ஆணி போன்றவை மேல் நோக்கித்தான் சிதறும். நீங்கள் குனிந்து இருந்தால் உடம்புக்கு மேலாக அது தெறித்துப் போய்விடும். நீங்கள் குனிவதற்குத் தோதாக கையில் சந்தன மாலையுடன் ஒருவர் அங்கு காத்திருப்பார். அவர் மாலையை அணிவித்துவிட்டு உங்கள் காலில் விழுவார். நீங்கள் அவரைத் தூக்கிவிடும் சாக்கில் குனிந்து கொள்ளுங்கள். மேடையின் படியில் வெடிக்கும் குண்டு வெடித்துச் சிதறி உங்களுடைய உடம்பில் லேசான சிராய்ப்பை மட்டுமே ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள். மாலையுடன் நிற்கும் வேறு யாருக்கு அருகிலாவது நீங்கள் போய்விடக்கூடாது என்பதற்காக நமது கட்சி உறுப்பினர் ஒருவர் சந்தனமாலைப் பெண்ணுக்கு அருகில் நின்று கொண்டிருப்பார் என்று திட்டம் அவருக்குச் சொல்லப்பட்டது. அதை ராஜீவ் நம்பினார். விடுதலைப் புலிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டை படியில் பொருத்தாமல் சந்தனமாலையைக் கையில் வைத்திருப்பவரின் மடியில் பொருத்தினார்கள் படுபாவிகள். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் இருக்க குனியச் சொன்னார்கள். அந்தோ… அதுதான் அவருக்கு உலையும் வைத்தது. ஒருவேளை காலில் விழுந்தவரைத் தூக்க முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் குண்டு வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் சாய்ந்து தப்பியிருக்கக் கூடும். என்ன செய்ய? பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடத்துக் கீழ் தான் படுகுழி வெட்டப்பட்டிருந்தது.

யார் செய்தது என்று தெரியாமல் கச்சிதமாக முடிக்க வேண்டும். அப்படியே தெரிய வந்தாலும் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக்கூடாது. சோனியா ஆட்சிக்கு வந்ததும் புலிகளுக்கு ஈழத்தைப் பெற்றுத்தருவார் என ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு மாநில அதிகாரம் பெற்றுத்தரப் பாடுபட்ட மிஸ்டர் கிளீன் ஸ்ரீ பெரும்புதூரில் முன் இரவில் வந்து சேர்ந்தார். மேடையைப் பார்த்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். படியருகே சிலர் நின்றிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறார்களே என்று அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தார். பெரு மரங்கள் சாயும்போது சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவராயிற்றே. ஒரு மாபெரும் யாகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சில உயிர்களை பலியிடுவதில் தவறில்லை என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார். ஆனால், பாவம் அன்றைய யாகத்தின் பலி ஆடு அவரே என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மேடைக்குப் போக வேண்டியவர் நேராகக் கூட்டத்துக்குள் கண்களை ஓட்டினார். சற்று தொலைவில் மங்கலான விளக்கொளியில் சந்தனமாலை பளபளத்தது. அருகில் கட்சி உறுப்பினர் நிற்பதும் தெரிந்தது. ராஜீவ் அவர்களை நோக்கி நடந்தார். மாலையைக் கழுத்தில் அணிவித்துவிட்டு அப்படியே காலில் விழுந்து கும்பிட்டார். விழுந்தவரைத் தூக்கிவிடக் குனிந்தார் ராஜீவ். குனிந்தவர் நிமிரவில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment